Anugraha Varthai Yode

தமிழ்

1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போது அடியாரை அனுப்புமையா! மனமதில் தயவுறும் மகத்துவபரனே! வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் சாமி நின்னருள் புரிவாய் 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி, துதிகனம் தினமுமக்கே பாத்திரமே; அதிசோபித பரனே! பாதசரண் ஆமென்!