தமிழ்
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே
1 பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின்ஆவியே
2 தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்
3 துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிரப்பிடுமே ஆனந்ததால்
மகிழ்வுடன் துதித்திடவே