Athan Pinbu Yellam

தமிழ்

அதன்பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக ’தாகமாயிருக்கிறேன்’ என்றார். யோவான் 19:28 அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர் ‘தாகமாய் இருக்கிறேன்’ என்றார். 2. வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும். 3. அகோரமான நோவிலும் மானிடர் ஆத்துமாக்களை வாஞ்சிக்கும் தாகம்முக்கியம்; என் ஆன்மாவும் ஒன்றே. 4. அந்நா வறட்சி தாகமும் என்னால் உற்றீர் பேர் அன்பரே; என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே.