Azhage en yesuve

தமிழ்

அழகே என் இயேசுவே அழகே என் பிரியமே அழகே என் ஆத்ம நேசரே-2 1. வெண்மையும் சிவப்புமானவர் தலை தங்கமயமானவர் - 2 புறாவின் கண்களே கன்னம் கந்தவர்க்கமே வெள்ளைப்போளம் உதட்டில் வடியுதே - 2 அழகே உம் கண்களே அழகே உம் கரங்களே அழகே என் இயேசு ஒருவரே - 2 2. தேனினும் இனிமையானவர் தேவிட்டாத சுவையானவர் - 2 வாசனை இன்பமே ஊற்றுண்ட தைலமே அழகே உம் நாமம் என்றுமே-2 அழகே உம் செயல்களே அழகே உம் வார்த்தையே அழகே என் இயேசு ஒருவரே 3. அழகிலும் அழகானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் -2 (இயேசு) இராஜாதி இராஜைேன என் மணவாளளே அழகே உம் அன்பு என்றுமே-2 அழகே உம் ஆற்றலே அழகே உம் கிருபையே அழகே என் இயேசு ஒருவரே-2