Bethalaiyil piranthavarai

தமிழ்

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில் 4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில் 5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில் குளிரும் பணியும் கொட்டினிலே கோமகனும் தொட்டிலிலே ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோ தூங்கு தூங்கு பாலா நீ தூங்கு தூங்கு பாலா நீ