தமிழ்
தெய்வத்தின் சந்நிதானம் என்
உள்ளத்தின் ஆனந்தமே
காருன்யமாம் அவர் சப்தம்
என் காதுகளுக்கின்பமே
தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு
தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்தி தரும்
அவர்தரும் வாக்குத்தத்தங்கள்
உன்னைஅனுதினம் வழிநடத்தும் -தெய்வத்தின்
உலகத்தில் உன் நிலை நிர்பந்தமே
நோக்கிடு கல்வாரி நாயகனை
இயேசுவின் பாதத்தில் வீழ்ந்திடுவாய்
ஆறுதல் கண்டடைவாய் - தெய்வத்தின்