Deva Enai Marakathey

தமிழ்

தேவா எனைமறக்காதே,-இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே. நேயா உனையன்றி நீசனுக்கார் கதி? தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. –தேவா 1.வானுலகோர் தொழும் நாதா!-இந்த மானிடர்கரையேற வந்தசகாயா! காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற கர்மசண்டாளனைக் கண்ணோக்கலாகாதா? –தேவா 2.பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப் பாதகனைக்கைவிடாதே நலமெய்யா! தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத் தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா! –தேவா 3.என்மீறுதல் நினையாதே, எந்தன் இளமையின் பாவத்தை மனதில்வையாதே. உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன், நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன். –தேவா 4.நெருக்கப்படுகிறேன் தேவா,-என்னை உருக்கமாய்ப் பாராய், கிறிஸ்தேசுநாதா! இரக்கம் வைத்தென்றனின் குறைதனை நீக்கு, என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா! –தேவா 5.சரணம், சரணம் சருவேசா!-இந்தத் தருணம், தருணம் உன்றன் கருணை கூர் நேசா! மரணவேளையிலும் நடுத்தீர்வைதினத்திலும் மாபாதகன் எனை ரட்சியாய் நாதா! –தேவா