Eena Logathil Yesu Yen Piranthar

தமிழ்

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம் அன்பரின் ஜெனிப்பு அதிசயம் அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையே மனுக்குலம் மீட்ட மகிமையே மனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர் பரலோக மேன்மை துறந்ததால் பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா ஆகாய மகிமை ஜொலித்ததால் ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்