Ekkaalathum Karthar Yesuvai

தமிழ்

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே உயர்வோ தாழ்வோ எந்நிலையோ எந்தன் தஞ்சம் இயேசுவே 1. மண்ணின் வாழ்வு மாயையாகும் மனிதன் காண்பது பொய்யாகும் மாறிடா நேசர் இயேசுவை மாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும் 2. அலைகள் மோதி எதிர்வந்தாலும் கலங்கிடேனே வாழ்க்கையிலே அசையா எந்தன் நம்பிக்கை நங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும் 3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது அருகில் வந்து உதவி செய்வார் கைவிடாமல் கருத்துடன் காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும் 4. தேவ பயமே ஜீவ ஊற்று மரண கண்ணிக்கு விலக்கிடுமே தேவ பாதையில் நடந்திட தேவாவியானவர் உதவி செய்வார் — எக்காலத்தும் 5. முன்னறிந்து அழைத்த தேவன் முடிவு வரையும் நடத்திடுவார் தேவ சாயல் மாறியே தேவாதி தேவனை துதித்திடுவேன் — எக்காலத்தும்