தமிழ்
என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்
ஆசீர்வாத நிறைவுடன்
அன்பே என் மேல் இறங்கிடும்
இரண்டோ மூன்று பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நான் இருப்பேன்
என்றுரைத்த வாக்குப்படி
இன்று எம்மை சந்தித்திடும்
கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா இயேசு நாதா
எங்கள் உள்ளம் உந்தன் அன்பால்
நிறைந்தும்மை துதித்திட
அந்தோ ஐனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்கி ஒளி காண்பாய்
ஆதரவாய் அன்றும் கரம்
நீட்டி சுகம் இந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா
ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரம்
பரிசுத்தம் அடைந்திட
ஆவலுடன் உம் வரவை
எதிர்நோக்கி காத்திருக்கும்
ஆவி வரம் யாவும் பெற்றுநிறைவுடன் இலங்கிட