En meetpar uyirodu irukaiyil

தமிழ்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர், என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்; விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர், மித்திரனே சுகபத்திர மருளும் ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார், அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்; மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்; மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார், கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்; பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார், பரம பதவியினுள் என்றனை எடுப்பார். பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர் சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்