En ullam kavarum

தமிழ்

என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என் உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும் இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என் சுத்த கிருபையின் வல்லமையால் என்னை முத்திரியும் உமக்கூழியம் செய்திட அத்தனே, உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன் சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட - என் உந்தனடியில் உறைந்து தனித்து ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் என் தேவனே, அதி நேசமாய் உம்முடன் இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என் அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்