Ennai tharukiren

தமிழ்

என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2) உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) 1. குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் (2) என் சித்தமல்ல உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே (2) 2. உம் சேவைக்காய் எனை தருகிறேன் வனைந்திடும் உம் சித்தம்போல் (2) உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே (2) உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2) குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் 3. உமக்காகவே நான் வாழ்கிறேன் வனைந்திடும் உம் சித்தம்போல் (2) எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட (2)