Entha Nilayil Nee Irunthalum

தமிழ்

எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே 1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த 2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த 3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த 4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த 5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த