Enthan ullathil

தமிழ்

எந்தன் உள்ளத்தில் புது உணர்வு எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி எந்தன் நடை உடை பாவனை சொல் செயல் எந்தன் இயேசு வால் புதிதாயின புதுவாழ்வு புது ஜீவன் புதுப்பாடல் என்னை சந்தித்த இயேசு தந்தார் ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன் ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன் 1. கதரேனர் கடற்கரையில் கல்லறையிடை வாசம் செய்த பொல்லாத ஆவி மனிதன் நாதர் பாதம் பணி நல்ல அற்புத மாற்றம் பெற்றான் 2. ஓடையில் உருண்டோடி வரும் சின்னக் கற்களும் வடிவம் பெறும் செல்ல தாவீதுக்கு கோலியாத்தை வீழ்த்த வல்ல ஆயுதமாகி விடும் 3. சிலுவை நிழல் வந்துட்டேன் இயேசுவின் கரம் பற்றிட்டேனே எந்தன் இயேசு விடம் கொண்ட உறவு என்னை புது வடிவம் திகழ் செய்யும் 4. கள்ளனும் கொள்ளைக்காரனான குள்ளன் சகேயுவும் மீட்படைந்தான் உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான் வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான்