Enthan vanjai uyar

தமிழ்

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே உந்தன் மகிமை என்று காணுவேன் 1. பார்க்க பதினாயிரம் கண்கள் வேண்டுமே பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே துதிக்க பதினாயிரம் நாவு வேண்டுமே துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே -எந்தன் 2. மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே சீருடை தரித்த கெம்பீர சபையோர் சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே - எந்தன் 3. வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு வனப்புடன் நிற்கும் சீயோனே இயேசு ராஜாவின் சத்திய நகரம் சிலுவையே உந்தன் அஸ்திபாரமே - எந்தன் 4. பரிசுத்தமே தன் எழில் எல்லையே பரம தேவனின் வாசஸ்தலமே பரிசுத்தவான்கள் பல கோடி வாழும் பரலோகமே இன்ப சீயோனே - எந்தன் 5. மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே மணவாட்டியாம் என் மகிழ்ச்சி அங்கே ஆயத்தப்படுத்தின உன்னிடமே எப்போது நான் வந்து சேர்வேனோ - எந்தன்