Inbame perinbamathey

தமிழ்

இன்பமிதே பேரின்பமிதே இயேசு நாமம் இன்பமிதே இன்பமிதே நல் இன்பமிதே இயேசு நாமமே பாவம் போக்க வந்த நாமம் இயேசு நாமமே வாதை போக்க வந்த நாமம் இயேசுவின் நாமமே - இன்பமிதே நேற்றும் இன்றும் மாறா நாமம் இயேசு நாமமே தேனிலும் இனிய நாமம் இயேசுவின் நாமமே - இன்பமிதே ஜீவ பாதை காட்டும் நாமம் இயேசு நாமமே ஜீவன் பெலன் தந்த நாமம் இயேசுவின் நாமமே - இன்பமிதே சாவு பயன்கள் நீங்கும் நாமம் இயேசு நாமமே கோபம் ரோகம் நீக்கும் நாமம் இயேசுவின் நாமமே - இன்பமிதே தேவ ராஜ்யம் சேர்க்கும் நாமம் இயேசு நாமமே தேவ நீதி நிறைந்த நாமம் இயேசுவின் நாமமே - இன்பமிதே