Inimaiyana Nearam

தமிழ்

இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே - இயேசய்யா (2) 1) பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும் வேதம் அறிந்தால் வேதனை மாறிடும் உமது அன்பு பெரிதல்லவோ - இயேசய்யா (2) உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும் 2) கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும் கஷ்ட நஷ்டங்கள் கறைந்து ஓடிடும் உமது உண்மை பெரிதல்லவோ - இயேசய்யா(2) உமது உண்மையில்(லே) அடிமை வாழ்ந்திடவேண்டும் 3) பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும் புதிய இதயமே துதித்துப் பாடிடு உமது கிருபை பெரிதல்லவோ - இயேசய்யா(2) உமது கிருபையில் அடிமை வாழ்ந்திடவேண்டும்