Ippo Naam Bethelegem

தமிழ்

இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம் தூதர் தீங்கானம் கீதமே கேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; தூதரில் சிறியர் தூய தெய்வ மைந்தன்; உன்னத வானலோகமே உண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; நம்மை உயர்த்துமாம் பிதாவின் மகிமை! முந்தி நம்மில் அன்புகூர்ந்தார் போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி விஸ்வாசத்தோடின்றே சபையில் தங்கும் பாலனின் சந்நிதி சேர்வோமே; மகிழ்ந்து போற்றுவோம் ஜோதியில் ஜோதியே! கர்த்தா! நீர் பிறந்த தினம் கொண்டாடத் தகுமே.