தமிழ்
இதோ மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம் லோகமே;
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள் மாந்தர்களே.
2 இதோ மா வேகத்தோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்
நல் நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின்மேல் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்;
3 ஆர் உம்மைப் பட்சமான
கர்த்தா இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்?
நீர் பாவம் செய்திலரே
பொல்லாப்பை அறயீரே;
ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?
4 ஆ! இதைச் செய்தேன் நானும்
என் அக்கிரமங்கள் தானும்
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதகங்கள் இந்த
வதைப்புக் காதி மூலங்கள்.
5 நானே கை கால் கட்டுண்டு
பாதாளத்தில் தள்ளுண்டு
கிடத்தல் நியாயமே
நானே முடிவில்லாமல்
சந்தோஷத்தைக் காணாமல்
வதைக்கப்படல் நீதியே.
6 நீரோ என்மேல் உண்டான
அழுத்தும் பாரமான
சுமை சுமக்கிறீரே;
ஆசீர்வதிக்க நீரே
போய்ச் சாபமாகிறீரே;
நான் தப்ப நீர் படுகிறீர்.
7 நீர் என் கடனைத் தீர்க்க
பிணையாய் என்னை மீட்க
மரத்தில் ஏறினீர்;
ஆ சாந்தமான சிந்தை
நீர் முள் முடியின் நிந்தை
எத் தீங்கையும் பொறுக்கிறீர்.
8 நான் சாவின் வாய்க்குத் தப்ப
நீரே அதை நிரப்ப
அதில் விழுகிறீர்;
நான் நீங்க நீர் முன்னிற்பீர்
நான் வாழ நீர் மரிப்பீர்
அவ்வாறு என்னை நேசித்தீர்.
9 கர்த்தாவே நீர் பகைக்கும்
பொல்லாப்பை என்றென்றைக்கும்
வெறுத்தரோசிப்பேன்;
என் இச்சையை நாள்தோறும்
ஆகாத சிந்தையோடும்
நான் சிலுவையில் அறைவேன்.
10 ஆ உமது ஜெபமும்
அவஸ்தையும் தவமும்
கண்ணீருங் கிலேசமும்
நான் செத்தால் பரலோக
சந்தோஷத்துக்குப் போக
வழித் துணைக்குதவவும்.