Iyare Neer Thangum

தமிழ்

ஐயரே நீர் தங்கும் என்னிடம் ஐயரே நீர் தங்கும் - இப்போது அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே ஐயா நீர் இரங்கும் பகல்முழுதுங் காத்தீர் சென்ற பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம் பரமனே இந்த இரவிலும் வாரும் பாவியை நீர் காரும் தங்கா தொரு பொருளும் என்னிடம் தங்கா தொரு பொருளும் -யேசு தற்பரனே நீர் ஒருவரேயென்னில் தங்கித் தயைபுரியும் உயிரே துமையன்றிப் பாவிக் குயிரே துமையன்றி - என்றன் உடல் உயிர் உம்மால் உய்கிறதையா உத்தமனே தங்கும் நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம் நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா நின்னை விடமாட்டேன் என்பாவம் மனியும் இறையே என்பாவம் மனியும் - அப்போது எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில் எனக்கோர் திகிலேது? எனக்கு நீர்காவல் என்றும் எனக்கு நீர்காவல் - என்றன் இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர் எல்லவர்க்குங் காவல் உம்மோடே படுப்பேன் ஐயா உம்மோடே படுப்பேன் - இரவில் உம்மோடேயர்வேன் சேதமில்லாமல் உம்மோடெழுந்திருப்பேன்