தமிழ்
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்.
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். - ஐயா
1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர் -
2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும், - ஐயா
3. வசை, இசை, பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும். - ஐயா
4. எண்ணம் வாய்க்காததால் எத்தனை துயர் கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன்.- ஐயா
5. குயவன்கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே!-