தமிழ்
ஜீவிக்கின்ற தேவன் நீர்
வானமும் பூமியும் மாரி போனாலும்
உம்வார்த்தைகள் மாறி போவதில்லை
பேசுகின்ற தேவன் நீர்
பேசாத கல் நீர் அல்ல
ஜீவனுள்ள தேவன் நீர் இயேசுவே
உம் ஒரு வார்த்தை போதும்
1. நித்திய ஜீவ மொழிகள் உம்மில்உண்டு
உம்மை விட்டு நாங்கள் எங்கே போவோம்
இதயத்தின் பாரம் அறிந்து
என்னோடு பேசும் உம் வசனம் போதும்
2. தபித்தாகூம் என்று சொன்ன வார்த்தை
செத்த சரீரத்தில் ஜீவன் வந்ததே
எங்களின் செத்த பகுதி எல்லாமே
வார்த்தையால் ஜீவன் பெரும்
3. வெளியே வா என்று சொன்ன உன் வார்த்தை
லாசருவை உயிர்பித்ததையா
ஆவியின் குளிரான வாழ்க்கை எல்லாம்
வார்த்தையால் ஜீவன் பெரும்.