Kaarunyam Ennum

தமிழ்

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர் எதிர்கால பயம் இல்லையே நீர் எனக்குள் இருப்பதால் (2) எதை குறித்தும் கலக்கம் இல்ல எனக்குள்ளே இருப்பதனால் (2) 1. நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2) அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல் (2) -எதிர்கால 2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று அதை நான் அறிந்துகொண்டேன் (2) நீதியுள்ள பலி செலுத்தி உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால 3. உலகம் தருகின்ற மகிழ்வை விட மேலான மகிழ்ச்சி நீரே (2) சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர் (2) -எதிர்கால