தமிழ்
களிகூரு சீயோனே
ஓ மகிழ் எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே
ஓ மகிழ் எருசலேம்!
2. ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
3. ஓசியன்னா ராஜாவே!
வாழ்க தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா ராஜாவே
வாழ்க தெய்வ மைந்தனே!