தமிழ்
1. களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே ;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்
கர்த்தர் நம் பட்சம் கர்த்தர்
நம்மோடு கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்?
யார் வல்லோர் ?
யார் எதிர்க்க வல்லோர் ?
யார் வல்லோர்?
2.திடனடைவோம் தீமை
மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால் !
உண்மை பக்தியாய்
நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால் .
3.வாக்கை நம்புவோம்
உறுதி மொழியாய்
கிறிஸ்துவில்
ஆம் ஆமேன் என்றே ;
பூமி ஒழிந்தும்
என்றும் உறுதியாய்
நிலைக்கும்
இது மெய் மெய்யே
4. நிலைத்திருப்போம்
கர்த்தரின் கட்டினில்
அதால் நித்திய
ஜீவன் உண்டாம் ;
பற்றும் ஏழையைத்
தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும்
பாதுகாப்பாராம்