Kalvariyin anbinaye (Balipeedathil)

தமிழ்

பலிபீடத்திலென்னை பரனே படைக்கிறேன் இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல் ஆண்டு நடத்திடுவார் கல்வாரியின் அன்பினையே ! கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தால் கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இலேன் சேர்ப்பீர் வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்துமா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலயமாக்கியே இப்போ ஆசீர் வதித்தருளும் சுயம் என்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணில் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால்