Karthavai Nambuvorai

தமிழ்

கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார் பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார். 2.கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம் நான் இயேசுவை பின்பற்றி இங்கே வாதை சகித்தால் மாநன்மை. 3. என்மேலே பாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன் அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென். 4. கசப்பும் கர்த்தராலே வரும் நான் பின்வாங்கேன்; ஜெபத்தில் ஆசையோடே விண்ணப்பம் பண்ணுவேன்; அப்போது தயவாக காப்பாரே கைவிடார்; இக்கட்டு பெரிதாக போம்போது தேற்றுவார். 5.அநேகர் ஆசைகொள்ளும் பொருளை வாஞ்சியேன்; கர்த்தாவின் வார்த்தை சொல்லும் மெய்ப்பொருள் நாடுவேன்; என் பொக்கிஷம் என் செல்வம் என் ஆஸ்த்தி கிறிஸ்துவே; என் பாக்கியம் பேரின்பம் எல்லாம் என் மீட்பரே. 6.என் இயேசுவை நான் பற்றி தொடர்வேன் ஆவலாய்; என் சாபத்தை அகற்றி ரட்சித்தார் நேசமாய்; நான் தப்ப எனக்காக தம் ரத்தம் சிந்தினார்;