Kirubai Purinthenai

தமிழ்

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் 1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து, வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை புரிந்தெனை 2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து, நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிருபை புரிந்தெனை 3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை புரிந்தெனை 4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை புரிந்தெனை 5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை புரிந்தெனை 6. அம்பரமீதுறை வானவர் போற்ற கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை புரிந்தெனை