Maangal neerodai vaanjithu

தமிழ்

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்துக் கதறுதே தஞ்சம் நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய் அன்பரின் இரட்சிப்பினால் தினமும் துதித்துப் போற்றிடுவோம் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலைகளிலிருந்தும் உம்மை தினமும் நினைக்கின்றேன் கன்மலையாம் தேவன் நீர் என்னை ஏன் மறந்தீர் எதிரிகளால் ஒடிங்கி அடியேன் துக்கத்தால் திரிவதேனோ தேவரீர் பகற்காலத்தில் கிருபையைத் தருகின்றீர் இரவினில் பாடும் பாட்டு எந்தன் வாயினிலிருக்கிறது