Manavalan Karthar Yesu

தமிழ்

மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா? பிரியமே நீ ரூபவதி எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன் 1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே 2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே 3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே