Mayangum Thaasanai Naatha

தமிழ்

மயங்கும் தாசனை நாதா நீர் நடத்தும்; என் பாதைகாட்டியாய் சகாயம் புரியும். 2.நீர் காட்டும் பாதைதான் எப்போதும் நல்லதே; சுற்று நேர் ஆயினும் விண் வீடு சேர்க்குமே. 3.என் சித்தம் ஆபத்தாம் உம் சித்தம் நாடுவேன்; நான் செல்லும் பாதையை நீர் காட்டக் கெஞ்சுவேன். 4.நான் தேடும் ராஜியம் உம் சொந்தமானதே; அங்கென்னைச் சேர்த்திடும் பாதையும் உம்மதே. 5.உம் சித்தம்போல நீர் என் பாத்திரம் எடுத்தும் சந்தோஷம் சஞ்சலம் ஏதாலும் நிரப்பும். 6.வியாதி சுகமோ இஷ்டர் பகைஞரோ வறுமை செல்வமோ சிறிதோ பெரிதோ. 7.என் இஷ்டம் எதிலும் வேண்டாம்; என் நாதரே என் வழிகாட்டியாம் நீர் சர்வ ஞானரே.