Naan Balaveena Thosiyam

தமிழ்

1. நான் பலவீன தோஷியாம் நீர் தயாமூர்த்தியே; நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே. 2.எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே எம் பாவம் நிந்தை தாங்கினீர்; என் சொல்வேன் அன்பையே! 3.பிதாவின் மாட்சி ஆசனம் அபாத்திர பாவிக்காய் சுதா நீர் நீத்து மாந்தர் தம் சரீரம் எடுத்தீர். 4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால் சகித்தீர் சாந்தமாய்; ஐயா எந்நாமம் சாற்ற உம் பொறுமை தூய்மைக்கே! 5.அன்பே நீர் மாந்தர் ஆகினீர் என் அன்பைப் பெற்றிட; நான் பாவி தோஷி வெட்கத்தால் முன்னிற்கத் துணியேன். 6.உம் தயை அன்பால் மட்டுமே நான் பாத்திரன் ஆயினேன்; உன் தாசர் காக்கும் வண்ணமே காப்பீர் நீர் என்னையும்.