Nal Meetbare Ummile

தமிழ்

நல் மீட்பரே உம்மேலே என் பாவம் வைக்கிறேன்; அன்புள்ள கையினாலே என் பாரம் நீக்குமேன்; நல்மீட்பரே உம்மேலே என் குற்றம் வைக்க நீர் உம் தூய ரத்தத்தாலே விமோசனம் செய்வீர். 2.நல் மீட்பரே உம்மேலே என் துக்கம் வைக்கிறேன்; இப்போதிம்மானுவேலே எப்பாடும் நீக்குமேன்; நல் மீட்பரே உம்மேலே என் தீனம் வைக்க நீர் உம் ஞானம் செல்வத்தாலே பூரணமாக்குவீர். 3.நல் மீட்பரே உம்பேரில் என் ஆத்துமா சார நீர் சேர்த்து உம்திவ்விய மார்பில் சோர்பெல்லாம் நீக்குவீர்; நேசா! இம்மானுவேலே! இயேசென்னும் நாமமும் உகந்த தைலம் போலே சுகந்தம் வீசிடும். 4.நல்மீட்பரே பாங்காக அன்போடு சாந்தமும் நீர்தந்தும் சாயலாக சீராக்கி மாற்றிடும்; நல்மீட்பரே உம்மோடு பின் விண்ணில் வாழுவேன்; நீடூழி தூதர் பாட பாடின்றிப் பூரிப்பேன்.