Nasareyane en yesaiah

தமிழ்

நசரேயனே என் இயேசய்யா என்றும் உம் நாமம் பாடி தேவாதி தேவன் நீரே என்று குரல் உயர்த்தி உம்மை நான் பாடுவேன் வானாதி வானங்களை உம் கரத்தினால் அளந்தீரல்லோ வெறுமையிலே பூலோகத்தை நிலை நிறுத்த செய்தீரே என் இயேசய்யா ஆகாய சமுத்திரத்தின் நீரே எல்லையை குறித்தீரல்லோ தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும் புரளாமல் காத்தீரே என் இயேசய்யா சீயோனின் சிகரமதே உம் சிங்காசனம் ஆனதே – சீயோனிலே உம்மை கண்டிடவே ஆசையாய் துடிக்கிறேன் என் இயேசய்யா உமக்கே ஸ்தோத்திரம் – 4