தமிழ்
1. நீர் திவ்விய வழி இயேசுவே
நீர் பாவ நாசர்தாம்
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்.
2. நீர் திவ்விய சத்தியம் இயேசுவே
உம் வாக்கு ஞானமாம்;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்.
3. நீர் திவ்விய ஜீவன் இயேசுவே
வெம் சாவை ஜெயித்தீர்;
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்.
4. நீர் வழி சத்தியம் ஜீவனும்;
அவ்வழி செல்லவும்
சத்தியம் பற்றி ஜீவனை
அடையவும் செய்யும்.