Nesaravar En Nesaravar

தமிழ்

நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் விசேஷித்தவர் சோகமடைந்தேன் நேசமதால் - நேசரவர் வெண்மையும் சிவப்புமானவரே கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே பதினாயிரங்களில் சிறந்தவரே அதிசயமானவர் அவர் பெயரே இவரென் ஆத்தும நேசரே வருவார் எனக்காய் வேகமே அவர் தலை முழுவதும் பொன்சின்மயமாய் அவர் தலை மயிர் சுருள் சுருளாக காகத்தின் நிறம் அவர் முடியாமே லோகத்தின் ஒளிவிளக்கவராமே அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள் கவரும் புறாக் கண்கள் போன்றவைகள் பாலிலே கழுவப்பட்டவைகள் நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள் அவரின் கன்னங்கள் உதடுகளாம் மலர்களின் வாசனை வீசிடுமாம் தங்க வளையல் போல் அவர் கரமாம் ! தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம் வார்த்தை பேசிடும் வாய் மதுரமாமே வார்த்தைகள் கிருபை பொழிந்திடுமே வார்த்தை என்பது அவர் ஒரு பெயரே வார்த்தைகளால் துதி சாற்றிடவே ரூபமதில் அவர்க்கிணை அவரே லீபனோன் மகிமை உடையவரே கேதுரு போல் அவர் உயர்ந்தவரே ஏதமிலா சிறப்பானவரே துள்ளிக் குதித்து மலை மேட்டினிலே வந்திடும் நேசரின் தொனியதுவே ஆரவார சப்தம் முழங்கிக் கொண்டே மேகத்தில் ஜோதியாய் தோன்றுவாரே இவரென் ஆத்தும நேசரே வருவார் எனக்காய் வேகமே