தமிழ்
பார் முன்னணை ஒன்றில்
தொட்டில் இன்றியே
பாலனாம் நம்
இயேசு கிடந்தனரே
வெளியில் புல் மீது
தூங்கும் பாலன் தாம்
காண மின்னிட்டதே
வான் வெள்ளிகள்தாம்
மா மா எனும் சத்தம் கேட்டு
விழிப்பார்
ஆயின் பாலன் இயேசு அழவே
நான் நேசிக்கும் நாதா நீர்
நோக்கிப் பார்ப்பீர்
தூக்கத்தில் நீர் தங்கி
ராவெல்லாம் காப்பீர்
என் நாதா என்றும் நீர்
என்னை நேசிப்பீர்
என்னோடு தரித்தே
அன்பாய் அணைப்பீர்
உம் பாலர் தம்மை
நீர் ஆசிர்வதித்தே
தூயோராக்கியே
சேர்ந்திடும் விண் வீட்டில்