Parane Thirukkadaikkan Parayo

தமிழ்

பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ? 1. திறம் இலாத எனை முனியாமல் – யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் — பரனே 2. மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே 3. அடியேனுக் கருள் செய் இப்போது – உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே 4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன் மனது களிக்க வர மாட்டாயோ? — பரனே 5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் – எனக் கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! — பரனே