தமிழ்
பெரியவர் [3] இயேசு
யோனாவிலும் பெரியவர்
சாலமோனிலும் பெரியவர்
தேவாலயத்திலும் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர்
1.கானாவூரினிலே
கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக
மாற்றின தேவன்
2.நாயீன் ஊரினிலே
நடுத் தெரு வீதியிலே
பாடை தொட்டு வாலிபனை
எழுந்திரு என்றார்
3.நாலாம் ஜாமத்திலே
நடுக்கடல் நீரினிலே
நடந்துவந்து சீஷர்களைத்
தேற்றின தேவன்
4.யவீரு வீட்டினிலே
வீட்டாரின் மத்தியிலே
கடந்துவந்து சிறுபெண்ணை
எழுப்பின தேவன்