Poorva Pramanathai

தமிழ்

பூர்வ பிரமாணத்தை அகற்றி நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார். 2 ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார் பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார். 3 தம் பாலிய மாம்சத்தில் கூர் நோவுணர்கிறார்; தாம் பலியென்று ரத்தத்தில் முத்திரை பெறுகிறார். 4 தெய்வீக பாலனே இயேசு என்றுமே நீர் மெய் மீட்பராய் இந்நாளிலே சீர் நாமம் ஏற்கிறீர். 5 அநாதி மைந்தனாய் விண் மாட்சிமையில் நீர் பிதா நல்லாவியோடொன்றாய் புகழ்ச்சி பெறுவீர்.