தமிழ்
1ம் பாகம்
பிரியமான இயேசுவே
என் நெஞ்சைத் தயவாக
நீர் பூரிப்பாக்கி என்னிலே
மிகுந்த நிறைவாக
தெய்வீக அன்பை ஊற்றியே
பேரருள் தந்த உம்மையே
நான் துதிசெய்வேனாக.
2.என் நெஞ்சில் உம்மால் பற்றின
அன்பென்னும் தீ எரியும்;
என் மனதும்மால் உத்தம
மகிழ்ச்சியை அறியும்;
நான் உம்மை நோக்கும் போதெல்லாம்
என் துக்கம் உம்மிலே உண்டாம்
அருளினால் தெளியும்.
3.நீர் என் வெளிச்சம்; உம்மால்
திறந்த முகமாக நான்
பிதாவின் இன்ப நெஞ்சைத்தான்
என் ஆறுதலுக்காக
கண்ணோக்கும்போது தயவாய்
நீர் என்னை நீங்கா ஜோதியாய்
பிரகாசிப்பிப்பீராக.
4.நீர் மோட்சத்துக்குப் போம் வழி;
உனக்குள்ளான யாரும்
தப்பிப் போகார்; ஆ இந்நெறி
விலகினோர் எல்லாரும்
கெட்டழிந்து போவார்களே;
வழியாம் ஸ்வாமீ உம்மிலே
நிலைக்க என்னைக் காரும்
5.நீர் சத்தியம்; நான் உம்மையே
தெரிந்து கொண்டிருப்பேன்;
மாறா மெய்ப்பொருள் நீரே
வீண் மாய்கையை வெறுப்பேன்;
உம்மாலே பாக்கியம் வரும்;
மெய்யே என் நெஞ்சை என்றைக்கும்
நான் உமக்கே படைப்பேன்.
6. நீர் ஜீவன்; என்னை நீர் நீரே
பலத்தால் இடைகட்டும்;
திடன் இல்லா அந்நேரமே
என் நெஞ்சில் ஊக்கம் தாரும்
தெய்வீக ஜீவன் என்னிலே
மென்மேலும் வளர்ந்தோங்கவே
நல்லாவியாலே காரும்.
2ம் பாகம்
நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில்
உம்மால் என்பசி ஆறும்;
நான் போம் வனாந்தரங்களில்
என் உள்ளம் உம்மை நாடும்;
பிதாவின் ஈவாய் மன்னாவே
நீர் என்னைப் பாவ இச்சைக்கே
விலக்கிக் காத்துக் கொள்ளும்.
2.நீர் ஜீவ ஊற்று; உம்மாலே
என் ஆத்மத் தாகம் தீரும்;
நீர் தரும் ஈவு நித்தமே
சுரக்கும் தண்ணீராகும்;
நீரூற்றாய் என்னில் ஊறுமேன்
நிறைவாய் நித்தம் தாருமேன்
ஆரோக்கியமும் சீரும்.
3.நீர் என்னை ஜோடிக்கும் உடை
நீர் என் அலங்கரிப்பு;
நான் உம்முடைய நீதியை
அணிவதென் விருப்பு;
பூலோகத்தின் சிங்காரமாம்
விநோத சம்பிரமம் எல்லாம்
என் ஆவிக்கு வெறுப்பு.
4. நீர் நான் சுகித்து தங்கிடும்
அரண்மனையும் வீடும்;
புசல் அடித்தும் விருதா
பேய் வீணாய் என்னைச் சீறும்;
நான் உம்மில் நிற்பேன் ஆகையால்
கெடேன்; பொல்லார் எழும்பி
நீர் என் வழக்கைத் தீரும்.
5.என் மேய்ப்பராய் இருக்கிறீர்
என் மேய்ச்சலும் நீர்தாமே;
காணாமல் போன என்னை நீர்
அன்பாக மீட்போராமே;
இவ்வேழை ஆட்டை என்றைக்கும்
நீர் விலக விடாதேயும்
நான் உம்முடை யோனாமே.
6.நீரே நான் என்றும் வாஞ்சிக்கும்
மா நேசமுள்ள நாதர்;
நீரே என் ஆசாரியரும்
பலியுமான கர்த்தர்;
நீர் என்னை ஆளும் ராஜாவும்
உம்மோடே எந்தப் போரிலும்
ஜெயிப்பேன் மா சமர்த்தர்.
3ம் பாகம்
நீர் உத்தம சிநேகிதர்
என் நெஞ்சும் மேலே சாயும்;
நீர் உத்தம சகோதரர்
நீர் என்னைப் பார்க்கும் தாயும்
நீர் நோயில் பரிகாரியே
உம்மாலே ஆறிப்போகுமே
என் காயமும் விடாயும்.
2.படையில் நீர் சேனாபதி
வில் கேடகம் சீராவும்;
கரும் கடலில் நீர் வழி
காண்பிக்கும் சமுக்காவும்;
எழும்பும் கொந்தளிப்பிலே
நீர் என் நங்கூரம் இயேசுவே
நான் ஒதுங்கும் குடாவும்.
3.நீர் ராவில் என் நட்த்திரம்
இருளில் என் தீவர்த்தி;
குறைவில் நீர் என் பொக்கிஷம்
தாழ்விலே என் உயர்ச்சி;
கசப்பிலே என் மதுரம்;
நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம்
பலக்க நீர் என் சக்தி.
4. நீர் ஜீவனில் விருட்சமும்
நீர் செல்வங்கள் பொழியும்
பூங்காவனமும் என்றைக்கும்
சுகம் தரும் கனியும்;
முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே
என் ஆவிக்கு நீர் இயேசுவே
குளிர்ந்த பூஞ்செடியும்.
5. நீர் துக்கத்தில் என் ஆறுதல்
நீர் வாழ்வில் என் களிப்பு;
நீர் வேலையில் என் அலுவல்
பகலில் என் சிந்திப்பு;
நீர் ராவில் அடைக்கலம்
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்
விழிப்பில் என் குறிப்பு.
6.ஆ ஒப்பில்லாத அழகே!
நான் எத்தனை சொன்னாலும்
என் நாவினாலே கூடாதே;
நான் நாவினாலே கூடாதே;
நான் என்ன வாஞ்சித்தாலும்
அதெல்லாம் நீரே இயேசுவே;
ஆ தயவுள்ள நேசரே
நீர் என்றும் என்னை ஆளும்.