Puthikkettatha Anbin Vaari

தமிழ்

புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும் உம் பாதம் அண்டினோமே தேவரீர் விவாகத்தால் இணைக்கும் இரு பேரும் ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே இவரில் உம் நேசம் நல் நம்பிக்கையும் நோவு சாவிலும் உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம் குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்; வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்.