Rajathi rajan devathi

தமிழ்

இராஜாதி இராஜன் தேவாதி தேவன் வேகம் வருகின்றாரே (2) நம் இயேசு இராஜா வருவார் எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் - (3) முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும் வெள்ளங்கி தரித்தவராய் (2) ஜெயக் கொடிகள் பிடித்திடுவோம் மீட்பரின் கீதங்கள் பாடிடுவார் ஆஹா என்ன பேரின்பம் அது - (3) தீட்டுள்ளதொன்றும் உள்ளே செல்லாத மேலோக ஆட்சி இது துக்கம் நோயும் அங்கில்லையே பசி தாகமும் அங்கே இல்லை பெரும் அல்லேலுயா முழக்கமே - (3) விருந்தாகும் இந்த ஆராதனையை தந்துமே மகிழச் செய்தார் மத்திய வானத்தில் ஓர் விருந்து சிறப்பாகவே ஒதுக்கிடுவார் மீட்கப்பட்டோர் மட்டும் அருந்த - (3) பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும் காலம் இதுவே தானே நீதிமானே நீதி செய்வாய் பலனோடு நான் வாரேன் என்றார் ஆமேன் இயேசுவே வாரும்மையா - (3)