தமிழ்
ரட்சா பெருமானே பாரும்
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்
தேடி வந்து நிற்கிறோம்.
இயேசுநாதா இயேசுநாதா
உந்தன் சொந்தமாயினோம்.
2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்
இயேசுநாதா இயேசுநாதா
மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்.
3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
இயேசுநாதா இயேசுநாதா
ஒருபோதும் கைவிடீர்.
4. ஜீவ காலபரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
இயேசுநாதா இயேசுநாதா
ஊழி காலம் வாழ்விப்பீர்.