Sutha Aavi Yennil Thangum

தமிழ்

சுத்த ஆவி என்னில் தங்கும் நானும் சுத்தன் ஆகவே : பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ; உம ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி என்னில் தங்கும் நானும் சத்யன் ஆகவே : தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே : நீர் என்னில் பிரவேசியும் ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே : துர்ச் சுபாவம் போகப் பண்ணும் : அன்பில் நான் வேரூன்றவே அன்பின் ஸுவாலை எழுப்பும் மென் மேலும் வளர்ந்திடும். 4. வல்ல ஆவி என்னில் தங்கும் ; நானும் வல்லோன் ஆகவே ; சாத்தான் என்னை தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே நீர் என் பக்கத்தில் இரும் என்னை பலப்படுத்தும். 5. நல்ல ஆவி என்னில் தங்கும் நானும் நல்லோன் ஆகவே ; பகை மேட்டிமை விரோதம் மற்றும் தீமை யாவுமே என்னை விட்ட கற்றுமேன் என்னை சீர்ப்படுத்துமேன் தெய்வ ஆவி என்னில் தங்கும் நானும் உம்மில் தங்கவே மோட்ச பாதையில் நடத்தும் இயேசுவின் முகத்தையே தெளிவாகக் காண்பியும் என்னை முற்றும் ரட்சியும்