Thai maranthalum neer

தமிழ்

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப-தில்லையே- தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2 -தாய் மறந்தாலும் மலைபோன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே - 2 -தாய் மறந்தாலும் காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே - 2 -தாய் மறந்தாலும்