Thedungal kandadiveer

தமிழ்

தேடுங்கள் கண்டடைவீர் தேவ தேவனின் தூய திருமுகம் காண தேடிடுவோம் அதிகாலமே சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் - எந்த சேதமும் வந்தணுகாமல் இந்தப் புதுதினம் கண்டடைய தந்தனரே தமது கிருபை - தேடுங்கள் நல்ல சுகம் பெலன் தந்து தம் வல்ல நல் ஆவியும் வெல்ல பிசாசை ஜெயமெடுத்து சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார் ஊண் உடை தந்தாதரித்து - இந்த ஊழிய பாதையில் காத்து கூப்பிடும் வேளை செவிகொடுத்து கேட்டிடும் யாவையும் ஈந்தனரே - தேடுங்கள் ஜீவனும் உள்ள நாளெல்லாம் - என் தேவனைக் கீர்த்தனம் பண்ணி ஓசையுள்ள கைத்தாளத்தோடே நேசைய்யா இயேசுவை தோத்தரிப்போம் - தேடுங்கள் காலையில் தோத்திரக் கீதம் - இந்த வேளையில் வேதத்தின் தியானம் நல்ஜெப தூபம் எனது இன்பம் நற்கிரியைகளும் செய்துழைப்பேன் -தேடுங்கள் கர்த்தரை நான் எப்பொழுதும் -என் கண் முன்னில் நிறுத்தி நோக்க நாள் முழுதும் அவர் பின் நடக்க நேர்வழி பாதையுங் காட்டிடுவார் - தேடுங்கள்