Thirumuga Tholivatru

தமிழ்

1. திருமுகத் தொளிவற்று; பெருவினைகளில் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன்;-நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட, ஊக்கம் அருள், பரனே. 2. துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் நான் இழந்தேன்;-பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப் பாவிக் கிரங் கையனே. 3. பாதகர் மீதில் பரிதபியாமலும், பாவம் பெறாமலும் நீ-சுத்த நீதியை நோக்கில், உனது சமூகத்தில் நிற்பவர் ஆர், துய்யனே? 4. தன் புண்ணி யத்தால் எவனும் மன்னிப்புறத் தக்கவன் இல்லை மெய்யாய்;-எந்தை! உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய் உண்டு பொறுப் பெனக்கே. 5. மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என் வஞ்சக நெஞ்சதனை-நேராய் விண்ணையே நோக்கிடப் பண், இறைவா; உனை வேண்டி மன்றாடுகின்றேன். 6. மாறுபாடான இவ் வேழைக்கிரங்கி நீ மன்னிப்பருள் வதன்றி,-எனக் காறுதலாக உனது நல் ஆவியை அனுக்கிரகித்தாள், பரனே.