Thooya Thooya Thooyaa

தமிழ்

தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா ! தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ; தூய தூய தூயா! மூவரான ஏகா! காருணியரே தூய திரியேகரே ! 2.தூய தூய தூயா! அன்பர் சூழ நின்று தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய தூய தூயா ! ஜோதி பிரகாசா பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர் ? நீரே தூய தூயர் மனோவாக்குக் கெட்டா மாட்சிமை தூய்மை அன்பும் நிறைந்தோர் . 4. தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா ! வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே; தூய தூய தூயா! மூவரான ஏகா! காருணியரே தூய திரியேகரே!